அமீரக செய்திகள்
முக்கிய சாலை பகுதி நாளை மூடப்படவுள்ளதாக தகவல்

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், சனிக்கிழமை முதல் முக்கிய சாலை பகுதி ஒன்று மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான ட்வீட்டில், ஷேக் சயீத் பின் சுல்தான் தெரு ஆகஸ்ட் 19, சனிக்கிழமை முதல் பகுதியளவில் மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 19, சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 21 திங்கள் காலை 5 மணி வரை சாலையின் இரண்டு இடது பாதைகள் மூடப்படும்.
இந்த மாற்றம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்க ஒரு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறும், போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டுமாறும் அதிகாரிகள் அறிவுறித்தியுள்ளனர்.
#tamilgulf