அமீரக செய்திகள்
முக்கிய சாலையில் வேகக் குறைப்பு முறையை செயல்படுத்திய அபுதாபி காவல்துறை!

மழை காரணமாக எமிரேட்டில் உள்ள ஒரு முக்கிய சாலையில் வேகக் குறைப்பு முறையை அபுதாபி காவல்துறை செயல்படுத்தியுள்ளது.
Msaken மற்றும் Kuraa இடையே அல் ஐன்-துபாய் சாலையில் வேகம் 120kmph ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்பட்டுள்ள வேக வரம்புகளை மாற்றியமைக்குமாறும் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
#tamilgulf