அமீரக செய்திகள்
மழையுடன் தொடர்புடைய சில வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்பு

இன்றைய வானிலை நிலவரம் குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று வானிலை சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.
மழையுடன் தொடர்புடைய சில வெப்பச்சலன மேகங்கள் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளது.
லேசானது முதல் மிதமான காற்று வீசுவதால் தூசி வீசும்.
அபுதாபியில் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் துபாயில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். எமிரேட்ஸில் குறைந்தப்பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படும்.
#tamilgulf