மனித கடத்தலை எதிர்த்துப் போராடும் நிபுணர்களுக்கான டிப்ளோமா திட்டம்; நீதி அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது

அப்துல்லா பின் சுல்தான் பின் அவாத் அல் நுஐமி, நீதி அமைச்சரும், மனித கடத்தலை எதிர்ப்பதற்கான தேசிய குழுவின் (NCCHT) தலைவருமான “மனித கடத்தலை எதிர்த்துப் போராடும் நிபுணர்களுக்கான டிப்ளமோ திட்டத்தின்” ஒன்பதாவது பதிப்பை இன்று தொடங்கி வைத்தார்.
NCCHT மற்றும் துபாய் காவல்துறை, துபாய் நீதித்துறை நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் (UNODC) ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
ஆன் லைனில் நடைபெற்ற இவ்விழாவில், நீதி அமைச்சகத்தைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் முகமது அல் ஹமாடி, துபாய் காவல்துறையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டாக்டர் அப்துல் கத்தூஸ் அப்துல் ரசாக் அல் ஒபைத்லி, நீதிபதி ஹடெம் அலி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GGC) பிராந்திய இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) மனித கடத்தல் கண்காணிப்பு மையத்திலிருந்து, டாக்டர். சுல்தான் அல் ஜமால் கூறியதாவது:- “இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 500 பங்கேற்பாளர்களாக வளர்ந்திருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 146 பங்கேற்பாளர்கள் இந்த ஆண்டு பதிப்பில் இணைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
“மனித கடத்தல் என்பது மிகவும் கடுமையான நாடுகடந்த குற்றமாகும், இது அதன் குற்றவியல் வடிவங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அதனால்தான், இந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராடவும், அப்பாவி மக்களை அதன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பது மற்றும் சிறந்த சர்வதேச நடைமுறைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியம். மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்களை தயார்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு, 47 வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து 146 மாணவர்கள் டிப்ளமோ திட்டத்தில் சேர்ந்துள்ளனர். பெரும்பான்மையான 109 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர்கள், மற்ற 37 பேர் ஓமன், கத்தார், பஹ்ரைன், கொமோரோஸ், ஜோர்டான், சவுதி அரேபியா, குவைத், எகிப்து, ஈராக் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.