மனதிற்கு நிம்மதி தரும் க்ரோச்சட் கலை… எளிதாக கற்க சில வழிமுறைகள்!!

க்ரோச்சட் என்பது ஒரு வகை கலை வடிவமாகும். அதற்காக உல்லன்(woolen) நூல்களும், பிரத்யேக ஊசிகளும் உள்ளன. அவற்றை பின்ன கற்றுக்கொண்டால், நாம் பல்வேறு கலை வடிவங்களை உருவாக்கலாம். அவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொம்மைகள், அலங்கார பொருட்கள், ஆடைகள் என எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும்.
பல்வேறு முடிச்சுக்களைக்கொண்டு உருவாக்கப்படும் இந்த க்ரோசெட் என்பது ஒரு கலை மட்டுமல்ல, இதை செய்யும்போது மனதிற்கு நிம்மதியும் கிடைக்கும். வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும்போது, க்ரோசெட் உங்களுக்கு தேவையான ஒன்று, அதை கற்றுக்கொண்டு அதன் மூலம் நீங்கன் உருவாக்கும் அழகிய கலைப்பொருட்கள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தருவதுடன் மற்றவர்களையும் கவரும் வகையில் இருக்கும்.
க்ரோசெட் கற்க முதல் படி என்வென்றால், அதற்கு தேவையான பொருட்களை நீங்கள் முதலில் சேகரிக்க வேண்டும். க்ரோசெட் ஊசி, உல்லன் நூல், கத்திரிக்கோல் ஆகியவையாகும். கற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்ற டிசைன்களை தேர்ந்தெடுத்து சிறிய சிறிய பொருட்களாக செய்ய துவங்குங்கள்
அடிப்படைய தையல் முறைகளை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். மிகச்சில அடிப்படை தையல் முறைகளே உள்ளன. அவற்றை நீங்கள் முதலில் கற்றுக்கொள்ளுங்கள். தனியாக பின்னுவது பின்னர் சங்கிலித்தொடர் பின்னல் என முன்னேறி, இரட்டை பின்னல் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் அரை இரட்டை பின்னல் பழகுங்கள். நீங்கள் அது நன்றாக வரும் வரை பின்னிக்கொண்டே இருக்க வேண்டும்.
க்ரோச்செட்டில் போடப்படும் ஒவ்வொரு முடிச்சுகளும் ஒரே மாதிரி வரவேண்டும். அதுதான் நீங்கள் உருவாக்கும் பொருளை மேலும் அழகாக்கும். மேலும் அதன் அளவு, வடிவம் என்ற அனைத்தையும் நிர்ணயிக்கும். முதலில் நீங்கள் சின்னசின்னதாக செய்து பின்னர் பெரிதாக செய்யுங்கள்.
நீங்கள் அடிப்படை தையல் முறைகளை கற்றபின்னர், வடிவங்களை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு எது முடியுமோ அந்த வடிவத்தில் முதலில் தயாரியுங்கள். பின்னர் பல்வேறு வடிவங்களில், விதவிதமாக செய்யலாம். வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் நீங்கள் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
பயிற்சி ஒன்று மட்டும் தான் உங்களுக்கு நல்ல பொருட்களை செய்வதற்கு உதவும். தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டேயிருங்கள். புதிய வடிவங்கள் மற்றும் நுட்பங்களை பயன்படுத்த கற்றுக்கொண்டால் நீங்கள் தனித்துவம் வாய்ந்த க்ரோசெட்களை தயாரிக்க முடியும்.