உலக செய்திகள்
மத்திய ஆசிய நாட்டில் திடீர் நிலநடுக்கம்!

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். இந்த நாட்டில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது அதிகாலை 2.56 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் தேசிய நிலநடுக்கவியல் மையம் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
#tamilgulf


