சினிமா

மணிகண்டன் நடிப்பில் “குட் நைட்”; வெளியிடும் தேதி அறிவிப்பு

ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘குட் நைட்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி பேனரில் தயாராகி இருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், தற்போது ‘குட் நைட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button