சவுதி செய்திகள்

போதைப்பொருள் விற்பனை செய்த சவூதி குடிமகன் கைது

சவுதியில், எல்லை ரோந்து அதிகாரிகள் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிரான பெரிய அளவிலான அடக்குமுறையை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஜசான் பிராந்தியத்தின் அல் டயர் செக்டார் பகுதியில் ஒரே நாளில் 110 கிலோ போதைப்பொருள்களை கைப்பற்றினர்.

“போதைப்பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்கள் மற்றும் நமது சமூகத்தையும், நாட்டையும் குறிவைப்பவர்களும் தப்ப முடியாது” என்று உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சவுத் கூறினார்.

இதேபோல், வடக்கு எல்லைப் பகுதியில் சவூதி குடிமகன் ஒருவர் ஆம்பெடமைன் விற்பனை செய்ததற்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஜ்யத்தில் உள்ள குடிமக்கள் போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் இணையதளம் மூலம் புகாரளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button