பெடரல் தேசிய கவுன்சில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது!

பெடரல் தேசிய கவுன்சில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது முடிவடைந்துள்ளதாக தேசிய தேர்தல் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. எமிராட்டிஸ் அக்டோபரில் நடக்கும் FNC தேர்தலுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். இந்த வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஆகஸ்ட் 25ஆம் தேதி அறிவிக்கப்படும், இறுதிப் பட்டியல் செப்டம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை வெளியிடப்படும். FNCக்கான தேர்தல் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் நடைபெற்ற முதல் நாளில், FNC 162 விண்ணப்பங்களைப் பெற்றது. இதில், அபுதாபியில் 58, துபாயில் 23, ஷார்ஜாவில் 29, அஜ்மானில் 12, உம்முல் குவைனில் 12, ரசல் கைமாவில் 19, புஜைராவில் 9 பேர் சமர்ப்பிக்கப்பட்டனர். தேசிய தேர்தல் கமிட்டி இதுவரை பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.