பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான ஆன்லைன் சேவையை சவுதி அரேபியா தொடங்கியுள்ளது!

ரியாத்
சவுதி அரேபியா (KSA) அரசு சேவை தளமான அப்ஷர் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் சேவைகளை தொடங்கியுள்ளது.
இந்த சேவைகளை சிவில் விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் செயல் துணைச் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் சுலைமான் பின் அப்துல்அஜிஸ் அல்-யஹ்யா, செப்டம்பர் 26, செவ்வாய் அன்று தொடங்கி வைத்தார்.
புதிதாக தொடங்கப்பட்ட இ-சேவைகளின் விபரம்:-
– டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் காட்சி சேவை
– இறப்பு சான்றிதழ் வழங்கல் மற்றும் காட்சி சேவை
– டிஜிட்டல் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் சரிபார்ப்பு சேவை
பயனாளிகள் “Absher” தளத்தில் தங்கள் கணக்குகளில் உள்நுழைவதன் மூலம் இந்த சேவைகளுக்கான நடைமுறைகள் மற்றும் முன்நிபந்தனைகள் பற்றிய விரிவான தகவல்களை அணுகலாம்.
இந்தச் சேவைகள் மின்னணு பரிவர்த்தனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், செயல்முறைகளை ஒழுங்குபடுத்தும் போது நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.



