பாலஸ்தீனத்திற்கான முதல் தூதரை நியமித்த சவுதி அரேபியா!

பாலஸ்தீனத்திற்கான முதல் சவுதி தூதர் நயீப் பின் பந்தர் அல்-சுதைரி, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தனது நற்சான்றிதழ்களை வழங்குவதற்காக, செப்டம்பர் 26, செவ்வாய்கிழமை இரண்டு நாள் பயணமாக ரமல்லாவுக்குச் செல்கிறார்.
1967ல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு சவுதி அதிகாரி ஒருவர் பாலஸ்தீனத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். செப்டம்பர் 25, X -ல் பதிவிட்ட ஷேக், “பாலஸ்தீனத்திற்கான சவுதி அரேபியாவின் தூதரை நாங்கள் வரவேற்கிறோம், அவர் சில நாட்களுக்குள் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தனது நற்சான்றிதழ்களை வழங்குவார்.” என்று பதிவிடப்பட்டிருந்தது.
பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சு இந்த விஜயத்தை வரலாற்று சிறப்புமிக்கது என குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், அனைத்துத் துறைகளிலும் கூட்டு ஒத்துழைப்புக்கான கூடுதல் எல்லைகளைத் திறப்பதற்கும் இந்த விஜயம் ஒரு முக்கியமான வரலாற்று மைல்கல்லாகும்” என்று அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் “அனைத்து மன்றங்களிலும் பாலஸ்தீனிய மக்களின் நியாயமான தேசிய உரிமைகளை ஆதரிப்பதிலும், வழங்குவதிலும் உள்ள நேர்மையான நிலைப்பாடுகளை” பாராட்டியது.
சவுதி அரேபியா பாலஸ்தீனத்திற்கு ஒரு தூதரை நியமித்தது இதுவே முதல் முறை ஆகும்.