அமீரக செய்திகள்
பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக இறைச்சி இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை

கராச்சி
இறைச்சியில் பூஞ்சை காணப்பட்டதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக இறைச்சி இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கராச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஒரு நிறுவனம் அனுப்பிய இறைச்சியில் பூஞ்சை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு அக்டோபர் 10ம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு மாதாந்திர அடிப்படையில் 12 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் புதிய இறைச்சியை பாகிஸ்தான் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் இறைச்சி ஏற்றுமதியில் பெரும்பகுதி பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறது.
#tamilgulf