பண மோசடியில் ஈடுபட்ட 11 பாகிஸ்தானியர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை- சவுதி நீதிமன்றம்

ரியாத்
சவுதியில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 11 பாகிஸ்தானியர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதி பொது வழக்குரைஞரின் மோசடிப் பிரிவின் விசாரணையில், அந்தக் கும்பல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் வங்கி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று குறுஞ்செய்திகளை அனுப்பியது. பின்னர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, அந்தக் கும்பல் அவர்களின் வங்கி கணக்குகளை அணுகவும் பணத்தை எடுக்கவும் பயன்படுத்தி உள்ளனர்.
குற்றவாளிகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு ராஜ்யத்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள்.
அனைத்து வகையான நிதிக் குற்றங்களிலிருந்தும் மக்களையும் அவர்களின் பணத்தையும் பாதுகாப்பதற்கும், அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.



