அமீரக செய்திகள்
நவம்பர் 2023: பெட்ரோல் டீசல் விலை குறைந்தது

நவம்பர் 2023 க்கான பெட்ரோல் டீசல் விலையை UAE எரிபொருள் விலைக் குழு இன்று அறிவித்துள்ளது. அதன் படி, உள்ளூர் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 41 ஃபில்ஸ் குறைந்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Super 98 வகையின் விலை 11.9 சதவீதம் குறைந்து ஒரு லிட்டர் Dh3.03 ஆக உள்ளது.
சிறப்பு 95 விலை 12.3 சதவீதம் குறைக்கப்பட்டு Dh2.92 ஆக உள்ளது.
இ-பிளஸ் விலை லிட்டருக்கு 12.57 சதவீதம் குறைக்கப்பட்டு Dh2.85 ஆக உள்ளது.
டீசல் விலை 15 ஃபில்ஸ் குறைக்கப்பட்டு லிட்டருக்கு Dh3.42 ஆக உள்ளது.
UAE, ஆகஸ்ட் 2015 இல் அறிவிக்கப்பட்ட அதன் கட்டுப்பாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக, உலகளாவிய விலைகளுடன் விகிதங்களைச் சீரமைப்பதற்காக ஒவ்வொரு மாத இறுதியில் உள்ளூர் எரிபொருள் சில்லறை விலையை மாற்றியமைக்கிறது.
#tamilgulf