நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஷார்ஜாவில் 4 நாட்கள் தொடர் விடுமுறை

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஷார்ஜா அரசு அதிகாரப்பூர்வ விடுமுறை தேதிகளை அறிவித்துள்ளது. பொதுத்துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் 28 வியாழக்கிழமை முதல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.
ஷார்ஜா அரசு ஊழியர்களுக்கு 3 நாள் வார விடுமுறை (வெள்ளி முதல் ஞாயிறு வரை) கிடைப்பதால், அவர்களுக்கு நான்கு நாள் வார இறுதி விடுமுறையாக மாற்றப்படுகிறது. அக்டோபர் 2 திங்கட்கிழமை முதல் ஊழியர்கள் பணியைத் தொடங்குவார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிற பகுதிகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29 அன்று ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தேசிய தின விடுமுறைகள் – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், இது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடைசி நீண்ட வார இறுதி விடுமுறையாக இருக்கும்.



