தைவான் அதிபர் தேர்தலில் ஃபாக்ஸ்கான் நிறுவனர் போட்டி?

அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோன் ஹாய் பிரஸிஷன் நிறுவனம்.
உலகெங்கிலும் இந்நிறுவனம், ஃபாக்ஸ்கான் எனும் பெயரில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது. மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், உலகின் பல நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தை டெர்ரி கவ் எனும் தைவான் நாட்டின் கோடீசுவரர் 1974ல் தொடங்கினார். தனது உழைப்பால், முன்னணி நிறுவனமாக இதனை முன்னேற்றிய கவ், 2019ல் தனது தலைமை பதவியை துறந்தார். இவருக்கு தற்போதைய வயது 72. அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதம் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் எந்க கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கவ் அறிவித்துள்ளர்.