Site icon Tamil Gulf

தென்ஆப்பிரிக்காவில் ஐந்து மாடி கட்டிடத்தில் தீ விபத்து- 64 பேர் பலி

A major fire broke out in a warehouse in Umm Al Quwain

தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்-ல் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 64 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக கருகி உயிரிழந்துள்ளனர். 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் ஒரு காலத்தில் பரபரப்பாக செயல்பட்ட கட்டிடமாக இருந்து வந்துள்ளது. தற்போது குற்றச்செயல் புரியும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது. சட்டப்படி மற்றும் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இங்கு தங்கியுள்ளனர். இந்தநிலையில்தான் இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஒவ்வொரு மாடியிலும் சிறுசிறு குடில் அமைத்து தங்கியியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் 15-க்கும் மேற்பட்ட குடில்களில் தங்யிருக்கிலாம் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version