துபாய் ரைடு 2023: ஆயிரக்கணக்கான சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பைக்கிங் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்

துபாய் ரைடின் 2023 பதிப்பிற்கான ஷேக் சயீத் சாலை மாபெரும் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பைக்கிங் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். பல ரைடர்கள் இந்த நிகழ்விற்கு வண்ணமயமான ஆடைகளை அணிந்திருந்தனர். அது சவாரிக்கு கூடுதல் அழகு சேர்த்தது.
நூற்றுக்கணக்கான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் துபாய் ரைடு மார்ஷல்கள் தடையற்ற நிகழ்வை உறுதிசெய்ய அயராது உழைத்தனர்.
இது துபாய் ரைடு முன்முயற்சியின் நான்காவது பதிப்பாகும். துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (DFC) -ன் ஒருங்கிணைந்த பகுதியாக இது காணப்படுகிறது. சைக்கிள் ஓட்டுபவர்கள் குடும்பத்திற்கு உகந்த 4 கிமீ பாதை மற்றும் மிகவும் சவாலான 12 கிமீ பாதையை சவாரிக்கு தேர்வு செய்யலாம்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மாபெரும் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியில் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.