அமீரக செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் வாழ்த்து

துபாய்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய வெளிநாட்டினர் இன்று விளக்குகளின் திருவிழாவான தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
“உலகம் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்… அவர்களுக்கு மிகவும் வளமான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகை வாழ்த்துக்கள்” என்று அவர் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், உலகெங்கிலும் உள்ள குடியிருப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#tamilgulf