தனியார் பள்ளித் துறையில் வலுவான வளர்ச்சி: 2023-24 கல்வியாண்டில் புதிதாக 5 பள்ளிகள்

2023-24 கல்வியாண்டில் ஐந்து புதிய தனியார் பள்ளிகளைச் சேர்ப்பதன் மூலம் துபாயின் தனியார் பள்ளித் துறை தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தின் (KHDA) சமீபத்திய தரவுகளின்படி, பிரிட்டிஷ் மற்றும் இந்திய பாடத்திட்டங்களை வழங்கும் புதிய பள்ளிகள் 12,000 இடங்களைச் சேர்த்துள்ளன, இது துபாயின் கல்வி நிலப்பரப்புக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 27 புதிய தனியார் பள்ளிகள் நிறுவப்பட்டு, இத்துறையின் அளவை மேலும் கூட்டியுள்ளது. தற்போது, துபாயில் மொத்தம் 220 தனியார் பள்ளிகள் உள்ளன, இதில் 2022-23 கல்வியாண்டில் 326,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தின் (KHDA) இயக்குநர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா அல் கரம் கூறியதாவது:-
“தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலகின் முன்னணி தனியார் கல்வித் துறைகளில் ஒன்றை உருவாக்குவதற்கான தலைமையின் பார்வைக்கு மேலும் துணைபுரிகிறது. 2023-24 கல்வியாண்டில் ஐந்து புதிய பள்ளிகளைச் சேர்த்தது, இந்தத் துறையின் சுறுசுறுப்புக்கும் துபாயில் வழங்கப்படும் திடமான முதலீட்டுச் சூழலுக்கும் ஒரு சான்றாகும்.
துபாயின் வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், தனியார் பள்ளி துறையின் திறனை விரிவுபடுத்தவும் கல்வி சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்ற KHDA ஆர்வமாக உள்ளது. துபாயில் வழங்கப்படும் உலகத்தரம் வாய்ந்த கல்வியானது, வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும் உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக அதன் நிலையை மேம்படுத்துவதை உறுதிசெய்வதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
துபாயின் தனியார் பள்ளிகள் தற்போது பல்வேறு நாடுகள், மொழிகள் மற்றும் கல்வி முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 17 பாடத்திட்டங்களை வழங்குகின்றன. துபாயில் சீன, ஜப்பானிய, ஜெர்மன், பிரஞ்சு, ஆஸ்திரேலியன், ஸ்பானிஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் பாடத்திட்டங்களை வழங்கும் தனியார் பள்ளிகளும் உள்ளன என்று கூறினார்.



