டீசல் லாரி மீது பேருந்து மோதி 16 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று அதிகாலை 4 மணியளவில் 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிரில் வந்த டீசல் லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியதில் தீ பிடித்தது. லாரியில் இருந்த டீசல் டிரம்கள் வெடித்து சிதறியதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில், மேலும் 4 பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காணும் பணி நடைபெற்று வருகிறது.