விளையாட்டு

செஸ் உலக தரவரிசை பட்டியல்: பிரக்ஞானந்தா எந்த இடத்தில் உள்ளார்?

பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து முடிந்தது. இதில் இந்திய ‘இளம் புயல்’ பிரக்ஞானந்தாவும், நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியின் 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது. டைபிரேக்கரின் முதல் ஆட்டத்தில் தோல்வியும் 2-வது ஆட்டத்தில் டிரா ஆனதால் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் செஸ் உலக தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர்களான குகேஷ் 8-வது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 9-வது இடத்திலும் உள்ளனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button