சிரிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் எமிரேட்ஸ் உருவாக்கிய வீட்டுத் திட்டத்தின் தொடக்க விழா!!

சிரியாவில் எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 47-அலகுகள் கொண்ட வீட்டுத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நாட்டை தாக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் 65 மில்லியன் திர்ஹம்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது .
ஆகஸ்ட் 19 நடைபெறவிருந்த உலக மனிதாபிமான தினத்துடன் இணைந்து இந்த வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சிரியாவில் ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்ட மனிதாபிமான மற்றும் நிவாரண முயற்சிகளின் விரிவாக்கமே ‘அல் நகா’ வீட்டுத் திட்டம் என்று ERC பொதுச் செயலாளர் ஹமூத் அல் ஜுனைபி கூறினார்.
ஒவ்வொரு வீட்டுப் பிரிவிலும் இரண்டு படுக்கையறைகள், ஒரு லிவிங் அறை, ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறை உள்ளது. இதில் ஆறு பேர் வரை தங்கலாம்.
“உயர்தரம் வாய்ந்த ‘அல் நகா’ வீட்டுத் திட்டம் நிலநடுக்கத்தின் விளைவாக வீடுகளை இழந்த பல குடும்பங்களுக்கு ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கு பங்களிக்கும்” என்று லதாகியாவின் கவர்னர் அமர் ஹிலால் கூறினார்.