விளையாட்டு
சின்சினாட்டி ஓபன்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அல்காரஸ்

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் முதல் செட்டை 2-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
#tamilgulf