அமீரக செய்திகள்
சாலை விபத்தில் ஐந்து இளம் எமிரேட்டியர்கள் பலி

அல் ஐனில் நடந்த சாலை விபத்தில் ஐந்து இளம் எமிரேட்டியர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அல் ஐனில் செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் ஐந்து இளம் எமிரேட்டியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு அரபு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலோர் சமீபத்தில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றவர்கள் என்று இறந்த நபர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அல் ஐனில் உள்ள சாலையில் இந்த மோதல் ஏற்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். இறந்தவர்களுக்காக தியாகி உமர் அல் முக்பாலி மசூதியில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன, அதன் பிறகு அவர்கள் உம் கஃபாவில் அடக்கம் செய்யப்பட்டனர்.
#tamilgulf