சார்ஜா: நிறுத்தாமல் சென்ற ஓட்டுனரை 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்

அரசன் பைசல் (King Faisal ) தெருவில் நடந்த ஒரு விபத்தில், ஒரு பெண்ணின் மிது வண்டி ஏறி விபத்தை ஏற்படுத்தி நிறுத்தாமல் சென்ற ஓட்டுனரை சார்ஜா காவல் துறை 48 மணி நேரத்தில் கைது சேய்தது.
சந்தேக நபரைக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்வதற்கும், அவரது வாகனத்தைக் கைப்பற்றுவதற்கும் படை அதன் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் கேமராக்களைப் பயன்படுத்தியது.
விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஷார்ஜா காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, அமீரக பப்ளிக் ப்ராசிகியூஷன், போக்குவரத்து விபத்தை ஏற்பதுத்தி விட்டு தொடர்ந்து, வாகனங்களை நிறுத்தத் தவறினால், பாதிக்கபட்டவர் காயங்களுக்கு உள்ளாகும் பட்சத்தில், வாகன ஓட்டிகள் சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் 20,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்துவார்கள் என்று கூறியிருந்தது.
விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர் உடனடியாக விபத்து குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றும் ஷார்ஜா காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.