சவுதி செய்திகள்

சவுதி: தான்சானியாவில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் 16 மணி நேர அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டனர்

ரியாத்
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லா சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு, அக்டோபர் 5, வியாழன் அன்று தான்சானியாவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளை 16 மணி நேர அறுவை சிகிச்சையில் வெற்றிகரமாகப் பிரித்ததாக சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) தெரிவித்துள்ளது .

இரண்டு வயது தான்சானிய இரட்டையர்கள் – ஹாசன் மற்றும் ஹுசைன், 13.5 கிலோகிராம் எடையுடன் இணைந்து, கீழ் மார்பு, வயிறு, இடுப்பு, கல்லீரல், சிறுநீர் பாதை, குடல் மற்றும் ஒரு இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.

35 நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற இந்த அறுவை சிகிச்சை ஒன்பது நிலைகளில் நடத்தப்பட்டது.

சவுதியின் மனிதாபிமான உதவி நிறுவனமான KSrelief இன் தலைவரும், முன்னணி குழந்தை அறுவை சிகிச்சை நிபுணருமான Dr Abdullah bin Abdulaziz Al-Rabeeah அவர்களின் மேற்பார்வையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அரபு சேனலான அல்-எக்பரியாவிடம் பேசிய டாக்டர் அல்-ரபீயா, இரட்டையர்களின் உடல்நிலை உறுதியளிக்கிறது என்றும் அனைத்து முக்கிய அறிகுறிகளும் சீராக இருப்பதாகவும் கூறினார். மேலும், அல்-ரபீயா மருத்துவக் குழுவின் முயற்சிகளைப் பாராட்டினார்.

சவுதி அரேபியாவில் இரட்டைக் குழந்தைகளைப் பிரிப்பதற்கு ஆதரவளித்த மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு இரட்டைக் குழந்தைகளின் தாய் நன்றி தெரிவித்தார். மேலும், சவுதி அரேபியாவில் தான் தங்கியிருந்த காலத்தில் தனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பு மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக தலைமை மற்றும் மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

1990 ஆம் ஆண்டு முதல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் சவுதி திட்டத்தில் ஹசன் மற்றும் ஹுசைன் பிரிந்திருப்பது 59 வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button