சவுதி அரேபியா-ஈரான் இடையேயான உறவுகள் திரும்புவதை வரவேற்கும் துருக்கி!

ரியாத்
சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜாந்திர உறவுகள் திரும்புவதை துருக்கி வரவேற்கிறது என்று தெஹ்ரானின் வெளியுறவு அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சவுதி அரேபியாவும் ஈரானும் கடந்த மார்ச் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களைத் தொடர்ந்து உறவுகளை மீண்டும் ஏற்படுத்தவும், தங்கள் தூதரகங்களை மீண்டும் திறக்கவும் ஒப்புக்கொண்டன.
தெஹ்ரானில் தனது துருக்கிய பிரதிநிதியுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், ஈரான் சவுதி அரேபியா மற்றும் துருக்கியுடன் முத்தரப்பு பொருளாதார சந்திப்பை நடத்துவதில் ஈடுபட்டுள்ளது என்றார்.
துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளதோடு, உயர்மட்ட பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அந்த நாட்டுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
“ஈரானுடன் அனைத்து துறைகளிலும் நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க இந்த பயணம் வாய்ப்பளிக்கும்” என்று துருக்கி வெளியுறவு அமைச்சகம் கூறியது.