சவுதி ஃபால்கன்ஸ் கிளப் ஏலத்தில் விற்பனை SR3.2 மில்லியனை தாண்டியது!

ரியாத்
நான்காவது சவுதி ஃபால்கன்ஸ் கிளப் ஏலத்தில் விற்பனை SR3.2 மில்லியனை ($853,000) தாண்டியதாக சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ரியாத் அருகே உள்ள மல்ஹாம் தலைமையகத்தில் அக்டோபர் 1ல் ஏலம் துவங்கியது, இது நவம்பர் 15 வரை நடைபெறும். நான்கு ஃபால்கான்கள் SR385,000 க்கு விற்கப்பட்டன, இதுவரை மொத்த விற்பனை SR3.2 மில்லியனாக உள்ளது.
ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், ஃபால்கன்களில் முதலீட்டை ஆதரிப்பதற்கும், மேலும் ஏலங்களை நடத்துவதற்கும், வாங்குதல் மற்றும் விற்பதற்கான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியானது நாட்டின் பருந்து மரபுகளை மேம்படுத்துவதையும், அது தொடர்பான கலாச்சார மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் வழங்குவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.