சவுதி செய்திகள்
சவுதியில் 48 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி

ரியாத்
சவுதி அரேபியாவின் தெற்கு ஜசான் பிராந்தியத்தில் எல்லைக் காவலர்கள் 48 கிலோ போதைப்பொருள் கட் கடத்தல் முயற்சியை முறியடித்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதீனாவில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் (ஜிடிஎன்சி) ஷாபு எனப்படும் மெத்தாம்பேட்டமைன் பொருளை விற்றதற்காக பாகிஸ்தானிய குடியுரிமை பெற்ற இருவரை கைது செய்தது.
சந்தேக நபர்கள் உரிய அதிகாரிகளிடம் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
#tamilgulf