சலுகை விலையில் விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 மாடல் அறிமுகம்!

விங்ஸ் லைஃப்ஸ்டைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்- ஃபுளோபட்ஸ் 100-ஐ அறிமுகம் செய்தது.
இந்த இயர்பட்ஸ் டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5.3 மற்றும் AAC கோடெக் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 13 மில்லிமீட்டர் ஹை-ஃபிடிலிட்டி டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 ஸ்மார்ட் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
புதிய விங்ஸ் ஃபுளோபட்ஸ் 100 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸ்: புளூ, பிளாக் மற்றும் வைட் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை அமேசான் வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.