சவுதி செய்திகள்உலக செய்திகள்வளைகுடா செய்திகள்
கொரோனா எதிரொலி… முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிய சவுதி அரேபிய அரசு!

கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று தற்போது உலகநாடுகளில் பரவி வருகிறது. இதனையொட்டி சவுதி அரேபிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய வகை EG.5 என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உட்பட 51 நாடுகளில் தென்பட்டுள்ளது. இதன் காரணமாக சவுதி அரேபிய அரசு அங்குள்ள உம்ரா வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “மக்கா, மதீனா மற்றும் புனித மசூதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதின் மூலம் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படலாம். இதனால் நோய் பரவுவதை தடுக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#tamilgulf