குவைத் சர்வதேச விமான நிலையம் மூலம் அக்டோபரில் ஒரு மில்லியன் பயணிகள் பயணம்!

குவைத்
அக்டோபரில் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 1,013,505 ஆக உயர்ந்துள்ளதாக சிவில் ஏவியேஷன் பொது நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. அக்டோபரில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விமான சரக்கு போக்குவரத்தும் முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செயல் இயக்குநர் ஜெனரல் இமாத் அல்-ஜலாவி தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்திற்கான உள்வரும் பயணிகளின் எண்ணிக்கை 447,013, மற்றும் புறப்படும் பயணிகள் எண்ணிக்கை 566,492 -ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகமாகும்.
விமான இயக்கங்களைப் பொறுத்தவரை, குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு அக்டோபரில் மொத்தம் 11,169 விமானங்கள் இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இருந்த 8,807 விமானங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். விமானச் சரக்குகளைப் பொறுத்தவரை, அக்டோபரில் மொத்த சரக்கு இயக்கத்தின் அளவு தோராயமாக 19.4 மில்லியன் கிலோவாக இருந்தது, உள்வரும் சரக்கு மொத்தம் 15.2 மில்லியன் கிலோ மற்றும் வெளிச்செல்லும் சரக்கு சுமார் 4.1 மில்லியன் கிலோ என்று ஜலாவி அறிவித்தார்.
இந்த காலகட்டத்தில் துபாய், கெய்ரோ, ஜெட்டா, இஸ்தான்புல் மற்றும் தோஹா ஆகியவை பயணிகளின் மிகவும் பிரபலமான இடங்களாகும் என்றும் ஜலாவி குறிப்பிட்டார்.