குவைத்தில் புதிய நிதி, கல்வி அமைச்சர்கள் நியமனம்!

குவைத்
குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ், அடெல் அல்-மானேவை கல்வி அமைச்சராகவும், ஃபஹத் அல்-ஜரல்லாஹ் நிதி அமைச்சராகவும் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதம மந்திரி ஃபஹத் அப்துல் அஜிஸ் ஹசன் அல்-ஜரல்லாவின் முன்மொழிவின் பேரில் இந்த ஆணை வெளியிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கையில், நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
குவைத்தின் துணை எமிர் மற்றும் பட்டத்து இளவரசர் அல்-ஜாபர் அல்-சபா முன்னிலையில் உள்ள பயான் அரண்மனையில் இரு அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் மனாஃப் அப்துல்அஜிஸ் அல்-ஹஜேரி ஜூலை 12 அன்று காரணங்களை வெளியிடாமல் ராஜினாமா செய்தார், முன்னாள் கல்வி அமைச்சர் ஹமத் அல்-அத்வானி ஜூலை 17 அன்று ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.