சவுதி செய்திகள்
காசா நெருக்கடி பற்றி பிரெஞ்சு, ஈரானிய சகாக்களுடன் விவாதித்த சவுதி வெளியுறவு அமைச்சர்!

சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஞாயிற்றுக்கிழமை தனது பிரெஞ்சு மற்றும் ஈரானிய சகாக்களுடன் காசா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரெஞ்சு மந்திரி கேத்தரின் கொலோனாவுடனான தனது அழைப்பின் போது, உடனடி போர்நிறுத்தம் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மனிதாபிமான போர்நிறுத்தத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட வெள்ளிக்கிழமை ஐநா தீர்மானத்தை ஆதரித்ததற்காக இளவரசர் தனது நாட்டிற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் ஈரானின் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோல்லாஹியனுடனான உரையாடலில், இளவரசர் பைசல் காஸாவின் முன்னேற்றங்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக போர்நிறுத்தத்தை சர்வதேச சமூகம் செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தார்.
#tamilgulf