உலக செய்திகள்
கலிபோர்னியா பகுதியில் திடீர் நிலநடுக்கம்

உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகள் அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது கலிபோர்னியா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் இது 5.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்-கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று பயங்கர சூறாவளி காற்றுடன் மழையும் பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
#tamilgulf