கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எமிரேட்ஸ் குடிமக்கள் 3 பேர் உயிரிழப்பு

ஓமானில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த வாடி வழியாக வார இறுதியில் பயணித்த எமிரேட்ஸ் குடிமக்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
அல் புரைமி கவர்னரேட்டில் உள்ள ஓமன் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஏழு பேரை ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்கள் மஹ்தாவின் விலாயத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியாகியது. அதில் பயணித்தவர்களில் நால்வர் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணாமல் போன பயணிகளில் ஒருவரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. மேலும் இரண்டு உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. உயிரிழந்த மூவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
காணாமல் போனவர்களை தேடியபோது, சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினருடன் ஒத்துழைத்த குடிமக்களுக்கு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.