அமீரக செய்திகள்

கனமழையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபராதம்

கனமழையின் போது பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் அபராதம் குறித்த அறிவிப்பை அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவுகளில், அதிக மழையின் போது வாகனம் ஓட்டும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் கூறியுள்ளதாவது:-

மழைக் காலநிலையில் பள்ளத்தாக்குகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் மற்றும் அணைகளுக்கு அருகில் கூடினால், 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு கருப்பு புள்ளிகள் விதிக்கப்படும்.

வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்குள், அவற்றின் ஆபத்து அளவைப் பொருட்படுத்தாவிட்டால், 2,000 அபராதம், 23 கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகனங்கள் பறிமுதல்

அவசர காலங்கள், பேரிடர்கள், நெருக்கடிகள் மற்றும் மழையின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தடுப்பவர்களுக்கு Dh1,000 அபராதம், நான்கு கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

மேலும், வாகனம் ஓட்டும்போது பார்வையை மேம்படுத்த ஹெட்லைட்களை பராமரித்தல் மற்றும் பழைய டயர்களை நழுவாமல் தடுக்க புதிய டயர்களை மாற்றுவது ஆகியவை ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளாகும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button