ஓய்வூதிய ஆணையத்தின் புதிய தலைவராக ஷேக் முகமது நியமனம்!

பொது ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆணையத்தின் (GPSSA) இயக்குநர்கள் குழுவின் தலைவராக முபாரக் ரஷீத் அல் மன்சூரி நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவரை நியமனம் செய்துள்ளார்.
அவர் 2008 முதல் எமிரேட்ஸ் முதலீட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். 2014 முதல் 2020 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றினார்.
மேலும், அல் மன்சூரி 2000 மற்றும் 2008 க்கு இடையில் அபுதாபி ஓய்வூதிய நிதியத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் பணியாற்றினார், மேலும் UAE (SCA), Etisalat மற்றும் அபுதாபி செக்யூரிட்டீஸ் ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
இவர், அமெரிக்காவின் மேற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் (UWF) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.