ஓமனில் இன்று காலை 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

மஸ்கட்
ஓமனில் அக்டோபர் 21 சனிக்கிழமை காலை 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. ஓமன் கடலில் மஸ்கட் நேரப்படி காலை 10 மணியளவில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாக சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்க கண்காணிப்பு மையம் (EMC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தெற்கு அல் ஷர்கியாவில் உள்ள சூர் விலாயாத் பகுதியில் இருந்து வடகிழக்கே 57 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, ஓமானில் 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. ஓமானில் நிலநடுக்க அபாயம் மிதமானது என விவரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட 10 சதவீதம் வாய்ப்பு உள்ளது, மேலும் UAE இரண்டாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து குவைத், சவுதி அரேபியா என்று திங்க் ஹசார்ட் தெரிவித்துள்ளது.