ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்றாவது மாதமாக உயர்வு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எரிபொருள் விலைக் குழு வியாழன் அன்று சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மூன்றாவது மாதமாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல் ஒன்பது சதவீதத்திற்கும் மேலாகவும், டீசல் 15 சதவீதத்திற்கும் மேலாகவும் உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 1 முதல், Super 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு Dh3.42 ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விட இது 8.9 சதவீதம் அதிகமாகும். ஸ்பெஷல் 95 விலை ஆகஸ்ட் மாதத்தில் 3.02 தில் இருந்து செப்டம்பரில் லிட்டருக்கு 3.31 திர்ஹம்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது, இது 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. E-Plus 91 லிட்டருக்கு Dh3.23-ஆக விலை உயர்ந்துள்ளது. இது 9.5 சதவீதம் அதிகமாக இருக்கும்.
டீசல் விலை 15.25 சதவீதம் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 3.4 திர்ஹம்களாக உள்ளது.
2015 ஆம் ஆண்டு UAE பெட்ரோல் விலையின் கட்டுப்பாட்டை நீக்கியதில் இருந்து, அரசாங்கம் ஒவ்வொரு மாத இறுதியில் சில்லறை எரிபொருள் விலையை உலக விலைக்கு ஏற்ப மாற்றியமைத்து வருகிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் வெடித்த பிறகு கடந்த ஆண்டு விலை உச்சத்தை எட்டியது.
தொடர்ந்து மூன்று மாதங்களாக பெட்ரோல் விலை உயர்ந்து வந்தாலும், உலக சராசரியுடன் ஒப்பிடும்போது உள்ளூர் விலைகள் மூன்றில் ஒரு பங்கு குறைவாகவே உள்ளது.