ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு கடற்கரை பகுதியில் மழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக முன்னறிவிக்கப்பட்டதின் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் என்று நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. வானம் தெளிவாக மற்றும் ஓரளவு மேகமூட்டமாக இருப்பதால் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கின் சில பகுதிகளில், காற்று லேசானது முதல் மிதமானதாக இருக்கும். பகல் நேரங்களில் சற்று பலமாக இருக்கலாம், இது தூசி நிறைந்த சூழலுக்கு வழிவகுக்கும். இரவு நேரம் பொதுவாக ஈரப்பதமாக இருக்கும். அந்த ஈரப்பதம் வெள்ளிக்கிழமை காலை வரை அப்படியே இருக்கும்.
நாடு கோடை காலத்தின் முடிவை நெருங்கி வருவதால், இன்றய நாள் பொதுவாக குளிர்ச்சியாக இருக்கும். அபுதாபியின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும், துபாயில் 43 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.