ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வானிலை குறித்த அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வானிலை குறித்த அறிவிப்பை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், லேசானது முதல் மிதமான காற்று வீசும், சில சமயங்களில் தூசி காற்றும் வீசும். கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது, அவை மழையுடன் சில உள் பகுதிகளில் பரவக்கூடும்.
வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. அவை நாட்டில் 46ºC வரை அதிகமாக இருக்கலாம். புதன் அபுதாபியில் 43ºC ஆகவும், துபாயில் 42ºC ஆகவும் உயரும். இருப்பினும், வெப்பநிலை அபுதாபியில் 30ºC ஆகவும், துபாயில் 29ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 24ºC ஆகவும் இருக்கும்.
சில கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் திங்கள்கிழமை காலை நேரங்களில் ஈரப்பதத்துடன் இருக்கும். அபுதாபியில் 20 முதல் 80 சதவீதம் வரையிலும், துபாயில் 25 முதல் 85 சதவீதம் வரையிலும் ஈரப்பதம் இருக்கும். அரேபிய வளைகுடாவில் கடலின் நிலை சற்று முதல் மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் இருக்கும்.