எமிராட்டி விண்வெளி வீரர் பூமிக்கு திரும்புவதில் தாமதம்… அற்புதமான பயணத்தை பூமியிலிருந்து நேரடியாக பார்க்க ஏற்பாடு!

எமிராட்டி விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, மோசமான வானிலை காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் திடமான நிலத்தில் காலடி எடுத்து வைக்க இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
முன்னதாக அவர் சனிக்கிழமை மாலை 5.05 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கவிருந்தார் என இந்த வார தொடக்கத்தில் UAE விண்வெளித் தலைவர்கள் தெரிவித்தனர், இருப்பினும் அவர் இப்போது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமை காலை 8.07 மணிக்கு வந்து சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பணியை ஒத்திவைப்பதற்கு “ஸ்பிளாஷ் டவுன் தளத்திற்கு அருகில் உள்ள சாதகமற்ற சூழ்நிலைகள்” காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.
சுல்தான் அல் நெயாடி மற்றும் அவரது பணியாளர்கள் புளோரிடா கடற்கரையில் கடலில் தரையிறங்க உள்ளனர். திங்களன்று டாக்டர் அல் நெயாடி திரும்புவது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆறு மாத பயணத்தை நிறைவு செய்யும்.
விண்வெளிக்கு சென்ற நாட்டின் முதல் மனிதரான ஹஸ்ஸா அல் மன்சூரியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, டாக்டர் அல் நெயாடி மார்ச் 3 அன்று ISS க்கு வந்தார். அரபு உலகின் முதல் நீண்ட கால விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டு சாதனைப் புத்தகங்களில் தனது பெயரைப் பதித்துள்ளார். விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட முதல் அரேபியர் என்ற வரலாறும் படைத்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொதுமக்கள் டாக்டர் அல் நெயாடியின் அற்புதமான பயணத்தை பூமியிலிருந்து நேரடியாக MBRSC இணையதளம் மூலம் www.mbrsc.ae/live இல் பார்க்கலாம்.



