விளையாட்டு
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரனோய் 2-வது சுற்றுக்கு தகுதி

டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் 28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் லக்ஷயா சென், இரட்டையர் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இதில், இன்று நடந்த முதல் சுற்றுக்கான போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனோய் பின்லாந்தின் கால்லே கோல்ஜோனெனுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பிரனோய் 24-22, 21-10 என்ற கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
#tamilgulf