வளைகுடா செய்திகள்சவுதி செய்திகள்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்!

ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சவுதி அரேபியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய வெளியுறவு மந்திரி ஒருவர் தெஹ்ரானுக்கு ஏழு ஆண்டுகளில் செல்வது இதுவே முதல் முறை. சவூதி அரேபியா- ஈரானுடனான உறவுகளை மீண்டும் ஏற்படுத்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்ததை அடுத்து இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
திரு அமிரப்துல்லாஹியனின் பயணத்தில் பொருளாதார உறவுகளை மீட்டெடுப்பது குறித்த பேச்சுக்கள் அடங்கும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்து வருவதாக அவர் கூறினார்.
#tamilgulf