உலக செய்திகள்

இஸ்ரேலின் தூதரை திரும்பப் பெறுவதாக அறிவித்த துருக்கி!

டெல் அவிவ்
இஸ்ரேல் போர்நிறுத்தத்தை மறுத்து, காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை நிறுத்தியதை அடுத்து, துருக்கியின் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலில் இருந்து தனது தூதரை ஆலோசனைக்காக திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் ஏற்கனவே துருக்கியில் இருந்து தனது தூதரை திரும்ப அழைத்துள்ளது.

“இஸ்ரேலுக்கான துருக்கியின் தூதர் சாகிர் ஓஸ்கான் டொருன்லர் திரும்ப அழைக்கப்பட்டார்” என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் ஒரு விடுதலைக் குழு என்று கூறி, அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதலை எர்டோகன் ஆதரித்தார்.

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு துருக்கி மற்றும் பிற பிராந்திய நாடுகளில் இருந்து அனைத்து தூதர்களையும் இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button