இளம் ஜோடி திருமண முதலிரவில் மரணம்

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு புதுமணத் தம்பதியினர் திருமணமான இரவுக்கு மறுநாள் காலை படுக்கை அறையில் இறந்து கிடந்தனர்.
இந்த சம்பவம் முறையே 24 வயது மற்றும் 22 வயதுடைய திருமணமான தம்பதியினர் தங்கள் முதலிரவு அறையிலே மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திருமணமான மறுநாள் காலை அவர்கள் இருவரும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு அதே கிராமத்தில் ஒரே இறுதிச் சடங்கில் ஒன்றாக தகனம் செய்யப்பட்டனர்.
அவர்களின் படுக்கையறையில் போதிய காற்று சுழற்சி, மற்றும் காற்றோட்டம் இல்லாததாலும் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
யாரும் அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், அதனால் குற்றவியல் கோணம் தவிர்க்கப்படுவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.



