அமீரக செய்திகள்
இன்றைய வானிலை நிலவரம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு

இன்றைய வானிலை நிலவரம் தொடர்பாக தேசிய வானிலை மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடனும், சில நேரங்களில் மேகமூட்டத்துடன் இருக்கும். மழைப்பொழிவுடன் தொடர்புடைய வெப்பச்சலன மேகங்கள் சில கடலோர, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது சில மேற்குப் பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
அபுதாபியில் 23°C முதல் 31°C வரையிலும், துபாயில் 24°C மற்றும் 32°C வரையிலும் வெப்பநிலை இருக்கும். லேசானது முதல் மிதமான காற்று வீசுவதால் தூசி மற்றும் மணல் வீசும்.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடற்பகுதியில் மேக மூட்டத்துடன் கடல் மிதமானது முதல் கொந்தளிப்புடன் காணப்படும்.
#tamilgulf