இந்தியா செய்திகள்சிறப்பு செய்திகள்
இன்னும் சில நிமிடங்களில் நிலவில் தடம் பதிக்க உள்ள லேண்டர்!

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக காத்திருக்கின்றன. இன்னும் சில நிமிடங்களில் லேண்டர் நிலவில் தடம் பதிக்க உள்ளது.
இந்நிலையில், நிலவில் தரையிறங்க உள்ள சந்திரயான்- 3ன் ரோவரில் உள்ள சக்கரத்தில் அசோகச் சின்னமும், இஸ்ரோவின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ரோவர் தரை இறங்கி ஊர்ந்து செல்லும்போது நிலவின் மணல் பகுதியில் அசோக சின்னம் பதிவு செய்யப்பட உள்ளது.
#tamilgulf